பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகிகள் மாணவர்களின் பல்வேறு செயல்பாடுகளில் தலையிடுவதாகவும், தடுத்து நிறுத்துவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த உள்ளிருப்பு போராட்டமானது பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்று நடத்தப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், கலை அறிவியல் பிரிவு கதவுகளை மூடி வைத்திருப்பதாகவும், இதனால் 70 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கே வருவது கிடையாது. அந்த மாணவர்கள் திரும்ப வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும். மாணவர்கள் நடத்தும் பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை முடக்கக் கூடாது, அதில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை இடை நீக்கம் செய்வது மற்றும் மற்றும் மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.