Published on 22/07/2023 | Edited on 22/07/2023

கர்நாடகா அணையிலிருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகத் தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,487 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 2,500 கன அடி நீரும் முதல் கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முதன் முறையாகக் காவிரி ஆற்றில் ஐந்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.