Published on 25/06/2022 | Edited on 25/06/2022

இந்த கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' என்ற இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கான 'தேன்சிட்டு' இதழும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் இந்த முயற்சி திட்டத்திற்கு 7.15 கோடி ரூபாய் விடுவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழ், ஆங்கிலத்தில் மாதமிருமுறை ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள் வெளியிடப்படும் என முதன்மை செயலாளர் காகர்லா உஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கு படைப்புத் தளத்தை உருவாக்க மாதந்தோறும் கனவு ஆசிரியர் இதழையும் வெளியிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.