Published on 25/09/2019 | Edited on 25/09/2019
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 33க்கு விற்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு.
சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். வெங்காயம் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும், நிலையில் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் என்று கூறினார்.

டெல்லியில் மத்திய அரசின் நடமாடும் நியாய விலைக்கடை மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 22க்கு விற்கப்படுகிறது என்பது நினைவுக்கூறத்தக்கது.