பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் அத்துமீறல்களை கண்டு பிடித்து, அதனை தடுக்க தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் வல்லுநர்கள் இணையதளம், வாட்ச் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை பற்றி ஆபாச படங்களை, பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்ந்து வருபவர்களை கண்டு அறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
![officer saw tiktok video in government office](http://image.nakkheeran.in/cdn/farfuture/Uh4ekAiw0Lpbn4GP7NnBibWBPlxASLRhlhA5OHcIAJA/1576038183/sites/default/files/inline-images/1_242.jpg)
இதற்கிடையில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோ.செல்வகுமார் அருகிலேயே செல்போனின் டிக்டாக் செயலியில் பெண்களின் ஆபாச நடனங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் பார்க்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசு அலுவலகத்தில், அரசு அதிகாரிகள் குறிப்பாக பெண்கள் வேலை செய்யும் மற்றும் பொது மக்கள் வந்து செல்லும் முக்கியமான இடமான வருவாய்த்துறை அலுவலகத்தில் நடந்த இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.