Skip to main content

மாற்றியதே நீங்கள்தான், உங்களுக்கே தெரியலயா???

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
ops

 

தேனியிலுள்ள ஒரு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய துணைமுதல்வர், கல்வி துறைக்கு எந்த மாநில அரசும் ஒதுக்காத நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. எனக் கூறினார். அதற்குமுன் தேனியில் 10,11,12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார். கடந்த ஆண்டுமுதல் பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்கியவர்களின் விவரம் அறிவிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை மறந்துவிட்டு துணை முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மாற்றியதே அவர்கள் தானே என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்