Skip to main content

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்..! 

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Notice to Udayanithi Stalin in the case of Deputy Speaker Pollachi Jayaraman ..!


துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்கிற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கலைஞரின் வீட்டிலிருந்து பரப்புரையைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் தொகுதிகளில்,  உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

 

மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார். பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள்’ என சவால் விட்டுப் பேசியதாகத் தெரிகிறது.

 

இந்நிலையில், உதயநிதி பேச்சு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் தொல்லை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு,  வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்