Skip to main content

தீர்ப்பை விமர்சித்த தங்கதமிழ்செல்வனுக்கு நோட்டீஸ்!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018


18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்த தங்கதமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் சம்மன் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதனால், 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவுச் செல்லும் என்றும், சபாநாயகரின் உத்தரவுச் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் ஊடகங்களின் அளித்த பேட்டியின் போதும், விவாதத்தின் போது பணம் பெற்று தீர்ப்பு வழங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்தார். இதனால் அவர் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஸ்ரீமதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஸ்ரீமதி தொடர்ந்த வழக்கில் பேரில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

அதில், சென்னை உயர்நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்தது குறித்து நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறு தங்கத்தமிழ்செல்வன் அளிக்கும் விளக்கத்தில் திருப்தி இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடர நீதிமன்றத்திற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரைப்பார் என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்