Skip to main content

பொக்லைன் இயந்திரத்தால் வட மாநில தொழிலாளி தலை துண்டான விவகாரம் - மூவர் கைது  

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Northern State worker beheaded by Bokline machine  Three arrested

 

மதுரை விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளி மண் சரிந்து விழுந்து பலியான விவகாரத்தில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இப்பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர், திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிக்கொண்டார். சிக்கிக்கொண்ட தொழிலாளியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தலை துண்டாகி தொழிலாளி பலியானார். 

 

இது தொடர்பாக விளாங்குடி போலீஸார் விசாரணை செய்துவரும் நிலையில், ஒப்பந்த நிறுவனர் மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள்; எதிர்த்தும் ஆதரித்தும் வழக்கறிஞர்கள் மோதல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களின் அம்சங்கள்: ஆங்கிலேயக் காலத்து ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி, ஐ.இ.ஏ சட்டங்களுக்கு மாற்றாகப் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷ்ய அதிநியம்  உள்ளிட்ட சமஸ்கிருத பெயர்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்; எங்குக் குற்றம் நடந்தாலும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம்; காவல்துறையிடம் இணைய வழியில் புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் அழைப்பாணைகளை அனுப்புதல்; குற்றம் நடைபெற்ற இடங்களைக் கட்டாயம் காணொளியாகப் பதிவு செய்தல் வேண்டும்; கொடூர குற்றங்களில் தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயம்; பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பிற்காக வீடியோ, ஆடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
 

புதுச்சேரியில் குற்றவியல் சட்டங்களை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் மதுரையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு பிரிவு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு வழக்கறிஞர்கள் குழு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கிடையே கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

 தலை துண்டிக்கப்பட்ட இளைஞர்; காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Youth incident in Madurai over love issue

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அழகேந்திரன். பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் கள்ளிக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் அழகேந்திரன் மதுரை மாவட்டம் வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அழகேந்திரனின் உடலைக் கைபற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அழகேந்திரன் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். அது அந்தப் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவருக்குத் தெரியவர உடனே அழகேந்திரனை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால், அழகேந்திரன் காதலைத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அழகேந்திரனை, பிரபாகரன் அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் காதல் விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது தகராறு முற்றியதன் காரணமாக ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அழகேந்திரனின் தலையைத் துண்டித்துள்ளார். பின்னர் உடலையும், தலையையும் அங்கேயே போட்டுவிட்டு பிரபாகரன் தப்பித்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்துவிட்டதாக  அவரது பெற்றோர் மற்றும் உறவினர், தமிழ் புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரபாகரனை  கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.