Skip to main content

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா; நேரு உள்விளையாட்டு அரங்கில் குவிந்திருக்கும் கலைஞர்கள்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் விளையாடவுள்ளன.  இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன.

 

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெறவிருக்கும் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு  தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.  இதில் பங்கேற்பதற்காக அஸ்ஸாம், மணிப்பூர், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெண்கள் வந்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பூஞ்சேரி மட்டுமின்றி சென்னை முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை முதல் பூஞ்சேரி வரை கருப்பு, வெள்ளை சதுரங்கப் பலகைகளும், தம்பிக் குதிரைச் சின்னமும் கண்கவர் ஓவியங்களாக அலங்கரிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார். 

Next Story

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் 'தம்பி குதிரை' சிலை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Statue of 'Brother Horse' awaiting unveiling

தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை ) முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நாளை மறுதினம் மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் நாளை சென்னை வருகிறார். பின்னர் மாலை 5:45 மணி அளவில் கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த தம்பி குதிரையினுடைய சின்னம் சிலையாக அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நாளை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலை சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்கான சிலை என கீழே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.