தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை காக்கவும், வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் பா.ம.க., சார்பில துவங்கப்பட்டுள்ளது. செப்.1 ல் தேனி மாவட்டம் லாலிபாறையில் துவங்கிய இப்பயணத்தின் இரண்டாம் நாள் பொதுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது இதில் பா.ம.க .. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநில தலைவர் கோ.க.மணி, உள்பட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், " வைகை ஆற்றை காப்பதில் நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும். தாமிரபரணி, காவிரி, அத்திக்கடவு அவினாசி திட்டம், மேட்டூர் உபரி திட்டம், கொள்ளிடம், பாலாறு ஆறுகளை காப்போம் என்ற . விழிப்புணர்வு பிரசார பயணத்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தற்போது ஆலோசித்து வருகிறது. தண்ணீயில்லாத காடு என்ற மோசமான வார்த்தை 50 ஆண்டுகளுக்கு முன் 3 போக சாகுபடி நடந்துள்ளது. நாகரீகமான கட்சி எங்கள் மீது குறைகள் உள்ளது. குறைவான குறைவுகளுடன் உள்ள கட்சி ஆள வேண்டும என்பது நோக்கமல்ல தமிழத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தமிழக முன்னேற்ற திட்டங்கள் பா.ம.க விடம் நிறைய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீரன்றி வைகை வறண்டுள்ளது. வைகை அணையின் 71 அடி உயரத்தில் 21 அடி தூர்ந்து போயுள்ளது. மதுரை நகருக்குள் வைகை வரத்து கால்கள் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், ரசாயன கழிவுகள், திறந்த வெளி கழிவுகளுடன் சேர்ந்து இதர பகுதிகளுக்கு சுகாதாரமற்ற தண்ணீராக வந்து சேருகிறது. 258 கி.மீ., நீளம் கொண்ட தமிழகத்தின் 4 வது பெரிய ஆறான வைகையை நாம் காப்பாற்ற வேண்டும். மணல் கொள்ளையர்களை சிறையில் போட வேண்டும். தமிழக மானம், மரியாதை காக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் இல்லை சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது. இதை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வில்லை. இவற்றிற்கு பா.ம.க. மட்டுமே தீர்வு காண முடியும்.
எடப்பாடிக்கும் நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை. அரசியல் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் ஓரணியில் வாருங்கள். தமிழகத்தில் எவ்வித நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மழையை தேக்கி ரூ.120 லட்சம் கோடி ஆண்டுக்கு செலவிட்டால் சாகுபடி தழைக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் அதிகரிக்கும். விவசாயிகளை பற்றி சிந்திக்கும் பா.ம.க தான் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என குரல் கொடுத்தது. மத்திய சுகாதார துறையில் 50 ஆண்டுகளில் எந்த அமைச்சரும் செய்யாததை மன்மோகன் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்த பாமக அமைச்சராக இருந்த நான் ( அன்புமணி ராமதாஸ் ) கொண்டு வந்தேன். பா ம க வின் முற்போக்கு திட்டங்கள் இன்றைய தலைமுறைக்கானதல்ல.! அடுத்த தலைமுறையை காப்பதே . தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இளைஞர்கள் கையில் உள்ளது. கொள்ளையடித்த வரி பணத்தில் இலவசம் வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்." என்றார் அவர்.