Published on 26/11/2020 | Edited on 26/11/2020
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் நிவர் புயலையொட்டி, பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், மரம் முறிந்து விழுந்து சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அவசரகால உதவிகளுக்கு இந்த கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக கட்டுப்பாட்டு அறை- 0427- 2212844, சூரமங்கலம் மண்டலம்- 0427- 2387514, அஸ்தம்பட்டி மண்டலம் - 0427- 2314646, அம்மாபேட்டை மண்டலம்- 0427- 2263161, கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427- 2216616 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.