Skip to main content

’இடமில்லையா? அரசின் பதில் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது’ - சீமான்

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
seeman

 

கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் கோயில்களில் திருடப்பட்ட பழங்காலத்து சிலைகளை மீட்டெடுக்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருவது பாராட்டுக்குரியது. அதிலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன பல நூறு ஆண்டுகள் பழமையான இராஜராஜசோழன், உலகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டது அக்குழுவினரின் குறிப்பிடத்தக்க சாதனை.

 

இந்நிலையில் சிலைக்கடத்தல் பேர்வழி தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள ரன்பீர் ஷா என்பவரது வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரால் சோதனையிடப்பட்டுச் சிலைகள், கோயில் தூண்கள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ 100 கோடி எனக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இவ்வளவு கோடி மதிப்பு வாய்ந்த இச்சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு இடமில்லை என்றும், சிலைகளை எடுத்துச்செல்ல அரசு சார்பாக எந்தப் பொருளாதார உதவியும் செய்யப்படமாட்டாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

 

மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குக்கூடத் தமிழக அருங்காட்சியகத்தில் இடமில்லையென்றால் சிலைகள் மீட்கப்படும் என்கிற நம்பிக்கை அரசிடம் இல்லையா? அவ்வாறு மீட்கப்படும் சிலைகளை எங்குப் பாதுகாத்து வைப்பது என்பது குறித்தான ஒரு தொலைநோக்கும், திட்டமிடலும்கூட இல்லையென்றால் இவ்விவகாரத்தில் அரசினுடைய அக்கறையும், நிர்வாக மேலாண்மையும் இந்தத் தரத்தில்தான் இருக்கிறதா? இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பையும், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியத் தமிழக அரசால் இதற்கு ஒரு மாற்றிடத்தை ஒதுக்கித் தர முடியாதா? மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வீணாக விழாக்களில் விரயம் செய்யும் அரசு, சிலையை எடுத்து செல்லப் பணமில்லை என்பது எந்தவகையில் ஏற்புடையது? தங்கள் சொந்த பணத்தைப் போட்டு சிலையை எடுத்துச்செல்லும் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு இருக்கும் அக்கறை, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? அரசின் இந்தப் புறக்கணிப்பு கடத்தல்காரர்களுக்கு மேலும் ஊக்கம் தராதா?

 

இவ்வழக்கைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடமிருந்து மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி அரசியல் செய்த தமிழக அரசு, மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்குரிய அறைகளைக் கட்டாமல் இழுத்தடித்து வந்தததோடு, இப்பிரிவின் அதிகாரிகளைத் தான்தோன்றித்தனமாக மாற்றியும் வந்தது. தற்போது அதன் நீட்சியாகவே மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்கு அருங்காட்சியகத்தில் இடமில்லை என அறிவித்திருக்கிறது. இவைகளெல்லாம் சிலைக்கடத்தல்காரர்களைக் காப்பாற்றும் அரசின் நேரடி நடவடிக்கையே!

 

இவ்வாறு தொடக்கம் முதலே சிலைகளை மீட்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிற தமிழக அரசின் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதனை உடனடியாக மாற்றிக்கொண்டு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அவர்களுக்குரிய வசதிகளைச் செய்துதர வேண்டு மெனவும், மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குரிய இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாமகவிற்குக் கடைசி தேர்தல்; சீமான் கீழ்பாக்கத்திற்குப் போகவேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

'பணம் கொடுத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பாமக தான் கிட்டத்தட்ட 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பாமகவை பொறுத்தவரை நான் இந்த தேர்தல் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். இதுதான் அவர்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் என்று. ஏனென்றால் அவர்கள் கூட சேர்ந்து இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அது மட்டுமல்ல ராமதாசை பொறுத்தவரை நாங்கள் இனிமேல் மரம் வெட்ட மாட்டோம் என்று சொன்னால் தான் தமிழ்நாட்டில் டெபாசிட்டே வாங்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோதே, 'சீமானுடைய கருத்துகள் எல்லாம் நான் கருத்தாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவரை பொறுத்தவரை ஒன்று குற்றாலத்திற்கு செல்ல வேண்டும். அல்லது கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நாள் ஒன்று பேசுகின்றார் மறுநாள் இன்னொன்றை பேசுகின்றார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு மேலே கொஞ்சம் குழம்பி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு சென்று உள்ளதா? என்ற கேள்விக்கு 'எல்லா தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்று இருக்கிறது' என்றார்.

Next Story

“இந்தியன் 2 படம் மாதிரி 10 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சம் ஒழியாது” - சீமான்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
 Seeman spoke about indian 2 movie

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் இன்று (12-07-24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இந்தியன் 2 திரைப்படத்துள்ளார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த படத்தை எல்லோரும் பார்த்து ஆதரவு தர வேண்டும். அப்பொழுது தான் இந்த மாதிரி சிறந்த படைப்புகள் தொடர்ந்து வரும். இந்த படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் கேடுகெட்டு புறையோடி அழுக்கு சமூகமாக இருக்கிற இந்தச் சமூகத்தை பழுது பார்க்கிற ஒரு கலையாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். 

இந்த மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் எல்லோரும் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மாறினால் தான் இந்தச் சமூகம் மாறும். ஊழல், லஞ்சம் இருக்கிற வரை இந்தப் படத்திற்கான தேவை இருக்கத்தான் செய்யுது. நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்துதான் ஆக வேண்டும். தாயின் கருவறை முதல் கோவில் கருவறை வரை லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளது. கோவிலில் சிறப்புத் தரிசனம் உள்ளிட்டவற்றில் இருந்துதான் லஞ்சம், ஊழல் தொடங்குகிறது. 10 படம் எடுத்தாலும் லஞ்சம், ஊழல் ஒழியாது” என்று கூறினார்.