Skip to main content

''வேண்டாம்'' என பெண் குழந்தைக்கு பெயரிட்ட பெற்றோர்: வேண்டும் என்று வேலைக்கு எடுத்த ஜப்பான் நிறுவனம்...

Published on 12/07/2019 | Edited on 13/07/2019

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால், அடுத்தும் பெண் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என பெயர் வைப்பார்கள். அப்படி வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்று இந்த கிராமத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை. 


 

 

இந்த கிராமத்தில் உள்ள அசோகன் என்பவருக்கு முதல் இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைகளாக பிறந்தனர். இரண்டாவது குழந்தைக்கு 'வேண்டாம்' என பெயர் வைத்தார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார் 'வேண்டாம்'. பின்னர் பொறியியல் படிப்பில் சேர ஆசைப்பட்டார். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஸ்காலர் ஷிப் உதவியோடு பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.


பள்ளியில் படிக்கும்போதே சக மாணவர்கள், மாணவிகள் 'வேண்டாம்' என தன் பெயரை சொல்லி கிண்டல் செய்கின்றனர் என்றும், தற்போது கல்லூரியில் படிக்கும்போதும் கிண்டல் செய்கின்றனர் என்றும் பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். அதற்கு அவரது பெற்றோர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி வந்தனர். 

 

vendam


இந்த கல்லூரியில் தற்போது 'வேண்டாம்' மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் ஜப்பான் நிறுவனம் இவரை வேலைக்கு தேர்ந்தெடுத்தது. தான் வேலைக்கு தேர்வாகி உள்ளதை தனது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் 'வேண்டாம்'. என்னவென்றால் இவருக்கு ஆண்டு சம்பளம் ரூபாய் 22 லட்சம். 


ஜப்பான் நிறுவனத்தில் ரூபாய் 22 லட்சத்திற்கு சம்பளத்தில் வேலை கிடைத்ததால் நான் பிரபலமாகவில்லை. 'வேண்டாம்' என்ற பெயர் கொண்ட இந்த மாணவியை ஜப்பான் நிறுவனம் வேண்டும் என்று கேட்பதால்தான் பிரபலமாகி உள்ளேன் எனக் கூறிய 'வேண்டாம்', தங்கள் ஊரான நாராயணபுரத்தில் தன் பெயர் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களும் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள்; புதிய சர்ச்சை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Chinese Names in Arunachal Pradesh; New controversy!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமைக் கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 வது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “மோடி செய்தது என்ன?. 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது” எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.