Skip to main content

இறந்த வீரர்களுக்கு கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் அசோக்குமார் முந்த்ரா தலைமையில் சுமார் 2500 மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உயிரிழந்த சக கலைஞர் - உடைந்து நின்ற கார்த்தி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
karthi tribute to stunt trainer passed away in sardar 2 shooting

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்தது. 

இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. மேலும் கடந்த 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா  இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. 

சென்னையில் சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில், நடந்த படப்பிடிப்பின் போது கடந்த 16ஆம் தேதி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் படப்பிடிப்பு தளத்தில் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு மார்பில் அடிப்பட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் திரையுலகிலனர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து சர்தார் 2 படக்குழு சார்பில், படத்தின் தயாரிப்பு நிறுவனம், சண்டை கலைஞர் ஏழுமலை காலமானதை ஒட்டி இரங்கல் தெரிவித்தது. இந்த நிலையில் கார்த்தி ஏழுமலை உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் வைத்திருந்த ஏழுமலை உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவர், பின்பு ஏழுமலை குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்; அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
young woman misbehaves with a college student

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 20 வயதான மாணவி ஒருவர் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த 26 வயதான இளம்பெண்ணுடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளனர். 

அப்போது, மாணவிக்கு இளம்பெண் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து, பின்னர் அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரடமைந்த அந்தப் பெண் மாணவி குளிக்கும் போது அவரை ஆபாசமாகப் படம் பிடித்து ஓரினச்சேர்க்கைக்கு மீண்டும் அழைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் எல்லையை மீறிப்போக, அதிர்ச்சியில் மாணவி வீட்டை காலி செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் மாணவியிடம் வீட்டை காலி செய்தால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தால் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில்  விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவி கூறியதில் உண்மை இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் இளம்பெண் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏன் நான் அப்படிச் செய்தேன் என்று புரியவில்லை என்று கூறி என்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். இதனையேற்றுகொண்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் அயனாவரம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.