Published on 10/04/2020 | Edited on 10/04/2020
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மழை வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரிய நாயக்கன்பாளையம், காரைக்குடி, திருமயத்தில் 9 செ.மீ, சிவகிரி, தாமரைப்பாக்கத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஆங்காங்கே 30-40 கி.மீ வேகத்தில் காற்றுடன் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.