ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருந்தது. இது குறித்து தங்கள் தரப்பு பதில்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோவும் இதுகுறித்து தனது எதிர்ப்பை ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே தருண் அகர்வால் கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்து பேசாமல் தமிழ்நாடு அரசு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையை மட்டும் ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
இது தமிழக அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என போராட்டங்கள் மீண்டும் வேகமாக நடக்கும். இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகள் கலங்கம் அடைந்துள்ளனர்.
ஆலை ஏற்கனவே இயங்கிய மராட்டிய மாநிலத்தில் அந்த ஆலை போராட்டக்காரர்களால் அடித்து உடைக்கப்பட்டது. அதுபோல துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் அடித்து உதைக்கப்படும் என வாய்ப்பு இருக்கிறது என தமிழக அரசின் உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை அனுகலாமா? அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட ஒரு தனி சட்டம் இயற்றலாமா? என தமிழக அரசு ஆலோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.