Skip to main content

மோடிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் எடப்பாடி அரசு: தா.பாண்டியன் பேட்டி

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
tha pandian


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்காக தி.மு.க.வோடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும். கேரளாவில் மாணவர்களுடைய கல்விக்கடனை அந்த மாநில அரசே ஏற்றுள்ளது. இதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். கேரளாவில் பத்மநாத சுவாமி கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உள்ளனர். இதே போல் தமிழகத்திலும் சமூக புரட்சி திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 
 

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனாலும் மோடி அரசு இதை அலட்சியப்படுத்தி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு மாநில உரிமையை பேணிபாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த அரசு மத்திய அரசுக்கு பக்க வாத்தியம் வாசித்து வருகிறது. இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்