Skip to main content

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி- முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020


நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார். ரூபாய் 338 கோடி மதிப்பில் நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

 

அதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்க நாமக்கல்- எர்ணாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையத்தினை பார்வையிட்டு, இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி துறை சார்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை முதல்வர் பார்வையிட்டார்.

 

இந்த ஆய்வின் போது, முதல்வருடன் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்