பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெய்கிருஷ்ணன் மனைவி இறந்துவிட்டார். ஓய்வு நேரத்தில் டியூசன் எடுத்து வந்த ஜெய்கிருஷ்ணன் பணியிலிந்து ஓய்வு பெற்ற பின்னரும் டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இவர் கடைசியாக பணியாற்றிய பள்ளியில் மகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி படித்து வந்துள்ளார். அந்த மாணவி இவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே அவ்வப்போது இந்த மாணவியின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வந்ததுடன், பிரியமாக இருப்பதாக கூறி மாணவிக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்த பின்னரும் மகா, ஜெய்கிருஷ்ணனிடம் டியூசன் படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென மாயமாகிவிட்டனர். டியூசனுக்கு சென்ற மகள் திரும்பவில்லை என்று மகாவின் தந்தை பல இடங்களில் விசாரித்துள்ளார். அப்போதுதான் தலைமை ஆசிரியரும் மாயமானது குறித்து தெரிய வந்தது.
இதுகுறித்து மகாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரில் தனது மகளை, ஜெய்கிருஷ்ணன்தான் கடத்தி சென்றுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார். மகா தந்தையின் புகாரை ஏற்ற போலீசார் இருவரையும் தேடி வந்ததுடன், அனைத்து காவல்நிலயைத்திற்கும் தகவல் அனுப்பினர்.
இந்த நிலையில் பஞ்சாப் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது இவர்கள் இருவரும், ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது. மேலும் பஞ்சாப் போலீசார் ராமேஸ்வரம் போலீசாருக்கு இருவரின் பெயர்கள், அடையாளங்களை சொல்லி அவர்களை விசாரிக்க சொல்லியுள்ளனர். ராமேஸ்வரத்தில் வெளியே சுற்றித்திரிந்த இவர்களை பார்த்த சிலர், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
இதையடுத்து ராமேசுவரம் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்துள்ளது தெரிய வந்தது.
பஞ்சாப் போலீசாரும் மகா பெற்றோருடன் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அப்போது மகா பெற்றோர் முன்பு பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் மகா சொன்ன விசயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு மகா பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.
உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகா அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என ஜெய்கிருஷ்ணன் தெரிவித்தார்.
எங்களை பஞ்சாப்புக்கு அனுப்பினால் இருவரது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான். பஞ்சாப்புக்கு நாங்கள் போக விரும்பவில்லை. நான் மேஜர் என்பதால் யாருடன் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை எனக்கு உள்ளது என்று மகா கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். பொருந்தாத இந்த காதல் பற்றி பஞ்சாப் மற்றும் ராமேசுவரம் போலீசார் எடுத்துக்கூறியும் அதை மகத் பொருட்டாகவே கருதவில்லை.
இருவரையும் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்கள் இருவரையும் பஞ்சாப் போலீசாருடன் அனுப்பி வைத்தனர்.