Skip to main content

திருச்சியில் திருடுபோன 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒப்படைப்பு

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

More than 200 stolen cell phones in Trichy surrendered

 

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இன்று காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, துணை ஆணையர்கள் அன்பு மற்றும் சுரேஷ்குமார், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கடந்த 2022-2023 நிதியாண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, “திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்டு காணாமல் போன, திருடப்பட்ட 201 செல்போன்களை அதன் ஐஎம்இஐ நம்பரை கொண்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செல்போன்களை இன்று உரிய நபர்களிடம் ஒப்படைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடைமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய செல்போன்களை மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். திருச்சி மாநகர காவல்துறை தொடர்ந்து குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்