Published on 13/02/2021 | Edited on 13/02/2021

தஞ்சையில் பச்சிளங் குழந்தையைக் குரங்கு தூக்கிச்சென்று அகழியில் வீசியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தில் ராஜா என்பவரின், பிறந்து 8 நாட்களே ஆனா பச்சிளங் குழந்தையைக் குரங்கு தூக்கிச் சென்று அகழியில் வீசியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய குரங்கு இரண்டு குழந்தைகளைத் தூக்கிச் சென்ற நிலையில், பொதுமக்கள் குரங்கைத் துரத்தியபோது ஒரு குழந்தையை அகழியில் வீசியதால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.