Published on 13/10/2019 | Edited on 13/10/2019
திருச்சி நகை கொள்ளையில் 6 கிலோ தங்க நகை தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளையில் முருகன் கொடுத்த தகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியில் கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த கணேசனை வாடிப்பட்டியில் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 12 கிலோ நகைகள். அதற்கு முன்பு மணிகண்டனிடமிருந்து திருவாரூரில் 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 கிலோ நகைகள் என மொத்தம் 23 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.