![thi](http://image.nakkheeran.in/cdn/farfuture/IC_KiQo1OxQhZyJQxByDgqgQX5hgT5MO-utBs_yfLSM/1534859906/sites/default/files/inline-images/thiruvarur_1.jpg)
கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை அளவுக்கு அதிகமாக மழை பெய்து அணைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதங்களை தொட்டுவிட்ட நிலையிலும் இதுவரை திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்கொள்வதா என விவசாயிகள் சந்தேகத்துடனும் கவலையுடனும் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நிர்மல்ராஜை சந்தித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் கமராஜ் கூறுகையில் ," 2லட்சம் கனஅடி தண்ணீர் வந்தும் கடைமடை தண்ணீர் கிடைக்காதததற்கு முக்கிய காரணம் தூர்வாராதது தான். தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் தண்ணீர் குறித்து எந்த பகுதிக்கு சென்றும் பார்க்கவில்லை. தமிழக அரசு தண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருகிறது. அவர்களுக்கு விவசாயிகளைப்பற்றி கவலையில்லை. பணம் ஒன்றே நோக்கமாக உள்ளனர்" என்றார்.