Skip to main content

21 குண்டுகள் முழங்க மேஜர் உடல் தகனம்; நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சர்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Minister who gave the relief amount to major jeyanth family

 

அருணாச்சலப்பிரதேசம் மேற்கு கமெங் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் "சீட்டா" வகை ஹெலிகாப்டர் ஒன்று சாங் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினட் அதிகாரி இருவரும் விமானிகள் ஆக ஹெலிகாப்டரை இயக்கி சென்றுள்ளனர். காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அருணாச்சலப்பிரதேசம் மேற்கு பூண்டிலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இதன்பின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது. 

 

அருணாச்சலப்பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், விபத்தில் பலியான இரண்டு ராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் வி.வி.பி. ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் இவர்களில் ஜெயந்த் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஜெயமங்கலம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், மல்லிகா தம்பதியினரின் மகனான மேஜர் ஜெயந்த்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்லா சாராஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை.

 

இதனையடுத்து அவரது உடல் நேற்று நள்ளிரவு ராணுவ விமானத்தின் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு அங்கிருந்து இன்று காலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலைப் பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். தமிழக அரசு சார்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரடியாகச் சென்று ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதுபோல் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா, தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

மேலும் தமிழக அரசு அறிவித்த ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையும் ஜெயந்த் மனைவி செல்லா சாராஸ்ரீயிடம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ராணுவ உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி ராணுவ முறைப்படி அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அவரது தந்தை ஆறுமுகம் தீ மூட்டினார். ராணுவ வீரர் மரணத்தால் ஜெயமங்கலம் கிராமமே சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்