
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு மாணவர்கள் கரோனோ பாதிப்புக்கு ஆளாகி வருவதால், அம்மாநில எதிர்க்கட்சிகள் பள்ளி திறப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுஒருபுறம் இருக்க மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அந்த மாதிரியான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் தமிழக அரசு முடிவு எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.