Skip to main content

சிதம்பரம் அருகே சிறுதானிய பயிர்களின் விவசாய பயிற்சி

Published on 11/09/2017 | Edited on 11/09/2017

சிதம்பரம் அருகே சிறுதானிய பயிர்களின் விவசாய பயிற்சி 

சிதம்பரம் அருகே  புதுச்சத்திரம் பகுதியில் உள்ள அத்தியாநல்லூரில் வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் மூலம் சிறுதானிய பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாய பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் விஜயராகவன் நிகழ்சிக்கு தலைமை ஏற்று விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி தொழிற்நுட்பம் குறித்து விளக்கி பேசினார்.

 அட்மா வட்டார தொழிற்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி, உதவி தொழிற்நுட்ப மேலாளர்கள் மனோஜ், வசுமிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் புதுச்சத்திரம், அத்தியாநல்லூர் கிராம பகுதிகளில் இருந்து முன்னோடி விவசாயிகள் மனோகர், செந்தில்குமார், மகேஸ்வரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சிறுதாணியங்கள் பற்றிய விபரங்களை கேட்டு அறிந்தனர்.  

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்