Skip to main content

10 சொகுசு கார்களுடன் சென்ற கண்டெய்னர் லாரி; திடீரென தீபற்றி எரிந்தால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Container lorry carrying 10 luxury cars worth Rs 1.5 crore catches fire midway

1.5 கோடி மதிப்புள்ள 10 சொகுசு கார்களுடன் சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி நடுவழியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

பூனே நாக்பூரிலிருந்து  சென்னை நோக்கி 1.5 கோடி மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. சரியாக வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரியத் துவங்கியது. 

இதனைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் உள்ளே இருந்த கார்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தப்பியது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வாலாஜாபேட்டை பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

 800 அடி மலை உச்சியில் அந்தரத்தில் தொங்கிய லாரி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
lorry hanging in the distance at the top of the 800-foot mountain

உத்திர பிரதேசத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக வாணியம்பாடி நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியில் உத்திர பிரதேசம் பகுதியைச் சேர்ந்த இம்ரான் புத்தன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள உயரமான மலை சாலையில் வந்து கொண்டுந்தபோது, பாரதி நகர் அடுத்த பொன்னியம்மன் கோவில் அருகே மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி லாரி  சுமார் 800 அடி உயரத்தில் மலை உச்சியில் ஆபத்தான நிலையில்  அந்தரத்தில்   தொங்கியது.

lorry hanging in the distance at the top of the 800-foot mountain

தகவல் அறிந்து அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் 2  ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி லாரியையும் லாரியில் இருந்த 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். லாரியை மீட்ட அந்த நேரம் லாரியில் இருந்த இரண்டு பேரையும் மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது.

Next Story

சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Son father by car for property

தூத்துக்குடியில் சொத்துக்காக தந்தையை மகனே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சின்னதுரை. ஆழந்தா எனும் கிராமத்தில் 80 வயதான கருப்பசாமிக்கு  சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை விற்ற முதியவர் கருப்புசாமி அதிலிருந்து வந்த 24 லட்சம் ரூபாயை சின்னத்துரையின் இரண்டு மகன்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன்கள் பெயரில் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு தந்தை கருப்புசாமியிடம் சின்னதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தோட்டத்திற்கு சாலையில் நடந்து  சென்று கொண்டிருந்த தந்தை கருப்பசாமி மீது சின்னதுரை காரை மோதிவிட்டு கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.