குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவா் கிராமத்தை சோ்ந்த மீனவா் ஒருவா் நாட்டு படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சோ்ந்த மீனவா் ஆரோக்கிய ஜீன் (35) மீன் பிடி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் தினமும் அதிகாலையில் ஆரோக்கியஜீன் அந்த மீனவா் வீட்டுக்கு வந்து அவருடன் மீ்ன் பிடிக்க செல்வது வழக்கம். இதனால் அந்த மீனவரின் இரண்டு பெண் குழந்தைகள் ஆரோக்கியஜீனிடம் மாமா என கூறி அன்புடன் பழகி வந்தனா். அவனும் அந்த குழந்தைகளுடன் நெருக்கமாக பழகி வந்தான்.
கடந்த 20 நாட்களுக்கு முன் ஆரோக்கியஜீன் இன்று மீன்பிடிக்க வரவில்லை என்று அந்த மீனவரிடம் கூறியதால் வழக்கம் போல் அந்த மீனவா் அதிகாலையில் மீன்பிடிக்க சென்று விட்டார். ஆனால் ஆரோக்கியஜீன் தனது மனைவியிடம் மீன்பிடிக்க செல்வதாக கூறி அந்த மீனவா் வீட்டுக்கு வந்து மீனவா் மீன்பிடிக்க சென்றதும் நைசாக வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டியிருந்த அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளான்.
இதையடுத்து அந்த மாணவி அலறி சத்தம் போட்டதால் ஆரோக்கியஜீன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானான். இது குறித்து குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஆரோக்கியஜீனை தேடிவந்தனா். அவன் போலிசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தான். இந்தநிலையில் ஆரோக்கியஜீன் பத்மனாபபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தான். மாஜிஸ்திரேட் அவனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் அந்த மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.