Published on 24/10/2020 | Edited on 24/10/2020
இன்று (24/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,129 கனஅடியில் இருந்து 18,694 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.39 அடியாகவும், நீர் இருப்பு 64.05 டி.எம்.சியாகவும் இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது.