Skip to main content

‘மேயரின் ஃபுட் போர்ட் பயணம்’ - நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

 'Mayor's Food Boat Trip' - Complaint for Action

 

'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காசிமேடு துறைமுகத்திற்கு வந்த பொழுது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியாவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும், சட்டமன்ற உறுப்பினர் எபினேசரும் தொங்கியபடி பயணித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

 

இதுகுறித்து மேயர் சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வகுமார் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு இணையம் வாயிலாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்தப் புகாரில், “சாதாரண மக்கள், பள்ளி மாணவர்கள் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஃபுட் போர்ட் அடித்தால் எப்படி சட்டவிரோதமான செயலோ, அதேபோல் இந்தச் செயலும் சட்டவிரோதமானது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 93 கீழ் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மீறி ஆபத்தை உணராமல் சாலை விதிகளைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதுவே பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு ஒரு விதி, அரசு அதிகாரிகளுக்கு ஒரு விதியா?” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்