கரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
அதேபோல் சென்னை மெரினாவில் உள்ள கடைகளை அகற்றி, ஸ்மார்ட் கடைகள் வைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் தற்போதைய கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், கடற்கரை சர்வீஸ் சாலைக்குப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட 900 கடைகளில் வெளி நபர்களுக்கு 40% கொடுக்கப்பட்டதற்கும் வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.