![bullets](http://image.nakkheeran.in/cdn/farfuture/D7qDeXy0YsYpPGZ4HAN7inLS5e4rP8sWuIRXGkcmeUU/1533347642/sites/default/files/inline-images/bullets.jpg)
கோவை விமான நிலையத்திற்கு தோட்டாவுடன் வந்த பாஜக நிர்வாகியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
சென்னை செல்வதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வந்த பாஜக நிர்வாகி ஜி.கே.செல்வக்குமாரிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 8 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜி.கே.செல்வக்குமார் துப்பாக்கி உரிமம் பெற்றவர் என்பது தெரியவந்தது. மேலும் சென்னை செல்வதற்காக தனது சூட்கேஸில் பொருட்களை எடுத்து வைத்தபோது, தவறுதலாக தோட்டாக்களை எடுத்துவைத்துவிட்டதாக அவர் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.