![madurai student incident cm palanisamy tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/KiRO4d_ZlGAJDAKLc9NrJ7CVMABG_3pHkalMN7UZ4Rc/1599901260/sites/default/files/inline-images/cm%20tweet_0.jpg)
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.