Published on 03/02/2021 | Edited on 03/02/2021

எம்.எல்.ஏ.வின் உறவினர்களுக்கு 'ஜல்ஜீவன்' திட்ட ஒப்பந்தம் தந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மருங்காபுரியில் 'ஜல்ஜீவன்' திட்ட ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் மணப்பாறை எம்.எல்.ஏ. உறவினர்களுக்குச் சொந்தமானது. தகுதியற்ற நபர்களுக்கு 'ஜல்ஜீவன்' திட்ட ஒப்பந்தம் வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (03/02/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக குடிநீர் வழங்கல் வாரிய மேலாண் இயக்குனர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.