மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் 120 பேர் கொண்ட சிறைத்துறை காவலர்கள் சோதனை நடத்தினர். செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருக்கின்றனவா? என போலீசார் சோதனை மேற்கொண்டனர். முடிவில், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இது குறித்து சிறைப்பட்சி ஒன்று "வழக்கமான சோதனை தான் என்றாலும், கைப்பற்றியவற்றை அப்படியே கணக்கு காட்டிவிடவா போகிறார்கள்?" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு "கடந்த தடவை சோதனை நடந்தபோது தேசமே கவனித்து வரும் அந்தக்கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருபவரிடம், பழைய 500 ரூபாய், புதிய 500 ரூபாய் மற்றும் அவரது வீட்டின் வரைபடத்தைக் கைப்பற்றினார்கள். ஆனால், இந்த விஷயம் அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இந்த தடவை எதுவும் கிடைத்ததோ? கிடைக்கவில்லையோ? சிறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்." என்றார்.