ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (02.01.2019) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் நாளை (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 91,975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக 156 ஒன்றியங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 158 ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 5,090 ஒன்றிய கவுன்சிலர், 9,624 கிராம ஊராட்சித் தலைவர், 76,746 கிராம ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவினை https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.