பரபரப்பாகப் பேசப்பட்ட தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் டவுண்சிப் பேரூராட்சியில் 8 வார்டுகளிலும், தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 என சமபலத்தில் வார்டுகளைக் கைப்பற்றியதால், சேர்மன் பதவியைக் கைப்பற்ற இரண்டு கட்சிகளுமே முனைப்பாகின. இரண்டு கட்சிகளுமே ஒரு வாக்கினைத் தன்பக்கம் கொண்டு வர எதிரெதிர் கட்சியின் கவுன்சிலர்களிடம் டீல் பேசியும் முடியாமல் போகவே, சேர்மன் மறைமுகத் தேர்தல் தினம், அ.தி.மு.க.வின் 4 கவுன்சிலர்கள் ஆஜராக, தி.மு.க.வின் 4 கவுன்சிலர்கள் வரவில்லையாம். குறித்த நேரத்திற்குள் வராமல் போனதால் தேர்தல் அதிகாரியான சண்முகநாதன் தேர்தலை ஒத்திவைத்துவிட்டார்.
சமபலம் என்றான நிலையில் வாக்கெடுப்பிலும் சமமான வாக்குகளே கிடைக்கும். திருவுளச் சீட்டுப் போட்டால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் அதனைத் தவிர்க்கும் வகையில் வாக்கெடுப்பு தினத்தன்று தி.மு.க. கவுன்சிலர்கள் ஆஜராகவில்லையாம், என்ற பேச்சுக்களும் கூடுகட்டுகின்றன.