கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இது பல ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் அப்பகுதியை சேர்ந்த ராமர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.
![Kulithalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/pkhKHJETXI_-FcKSoUkGrXtjNLkrlxSEF301rMyUslI/1564739232/sites/default/files/inline-images/kulitalai.jpg)
இந்த நிலையில் ராமர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை சம்மந்தமாக குளித்தலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரட்டை கொலையை நடத்தியது ஜெயகாந்தன் என்ற 19 வயதுடைய இளைஞன் என்றும், இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.ஜெயகாந்தன் மீது பல வழக்குகள் உள்ளது என்பதால் அவரது பின்புலத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளதா என விசாரித்தால், அதுபோன்று ஒன்றும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் பாஸ்கரனை, திருச்சி மத்திய மண்டல காவல்துறை டிஐஜி பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இரட்டை கொலை நடந்த உடனேயே துரிதமாக செயல்பட்டு ஜெயகாந்தனை கைது செய்திருக்கலாம் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் காவல்நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.