Published on 26/09/2022 | Edited on 26/09/2022

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கலைஞர்கள் பங்கேற்க நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சினிமா மற்றும் நாடக கலைஞர்களை அனுமதிக்கக் கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், திருவிழாவின் போது ஊரின் எந்த பகுதியிலும் ஆபாச நடனம் ஆடக்கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும் ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதிப் பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் ஆணையிட்டனர். நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள், தகாத வார்த்தைகள் இடம் பெற்றால், குறிப்பிட்ட கலைஞர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.