கன்னட எழுத்தாளரும், நாடகக்கலைஞரும், பிரபல திரைப்பட நடிகருமான கிரிஷ் கர்னாட்(வயது81) பெங்களூருவில் இன்று காலமனார். உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், ஞானபீடம் ஆகிய நாட்டின் உயரிய விருதுகளை பெற்றவர் கிரிஷ் கர்னாட்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்த கர்னாட், காதலன், ஹேராம், ரட்சகன், செல்லமே, காதல் மன்னன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கிரிஷ் கர்னாட்டின் மறைவு இலக்கிய உலகத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகர் நாசர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், கர்னாட்டின் மறைவுக்கு திரை உலக பிரபலங்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக அறிவித்தார்.
கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.