Skip to main content

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; பேருந்துகளுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
kilampakkam Bus Station Platform Numbers for Buses Notification!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயரிடப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) இன்று (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் போது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும். அதே சமயம் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கிளம்பும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும், பூவிருந்தவல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர் வரை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் செல்லும் அரசு பேருந்துகளுக்கான நடைமேடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில், மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்துகள் நடைமேடை எண் 1 மற்றும் 2 இல் இருந்து புறப்படும். உடன்குடி, கருங்கல், குட்டம், குலசேகரம், சிவகாசி, திசையன்விளை, திருவனந்தபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 2 இல் இருந்து புறப்படும். ராமேஸ்வரம், சாயல்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன், எர்வாடி, ஒப்பிலான், கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சிவகங்கை, தேவகோட்டை, தொண்டி செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 3 இல் இருந்து புறப்படும்.

கம்பம், குமிளி, தேனி, போடி, செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 4 இல் இருந்து புறப்படும். பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 4 மற்றும் 5 இல் இருந்து புறப்படும். அரியலூர் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 5 மற்றும் 8 இல் இருந்து புறப்படும். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 4 மற்றும் 5 இல் இருந்து புறப்படும். கரூர் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 4 மற்றும் 6 இல் இருந்து புறப்படும்.

kilampakkam Bus Station Platform Numbers for Buses Notification!

ஒரத்தநாடு, துறையூர், நன்னிலம், நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 5 இல் இருந்து புறப்படும். கோவை, ஈரோடு, உதகை, எர்ணாகுளம், குரூவாயூர், சேலம், திருப்பூர், நாமக்கல், மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 6 இல் இல் இருந்து புறப்படும். பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் எண் 4 மற்றும் 6 இல் இருந்து புறப்படும். திருவாரூர் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 5 மற்றும் 6 இல் இருந்து புறப்படும்.

செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், மேல்மலையனூர், வந்தவாசி செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 7 இல் இருந்து புறப்படும். சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலூர், ஜெயங்கொண்டம்  செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 8 இல் இருந்து புறப்படும். கடலூர், காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, வடலூர், விருத்தாச்சலம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 9 இல் இருந்து புறப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்