Skip to main content

கர்நாடாக "பந்த்" எதிரொலி - தமிழக பேருந்துகள் நிறுத்தம்!

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
கர்நாடாக "பந்த்" எதிரொலி - தமிழக பேருந்துகள் நிறுத்தம்!



எப்படி கர்நாடகா மாநிலம் குடகு மலையில் தொடங்கும் காவிரி ஆறு மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் உட்பட கர்நாடகாவின் 7 மாவட்டங்களை கடந்து தமிழகத்தில் மேட்டூரான சேலம் தொடங்கி 17 மாவட்டங்களை குளிர்வித்து காவிரி டெல்டாவில் கலக்கிறதோ அதே போல கோவா யூனியன் பிரதேசத்தில் தொடங்கும் ஆறு மகதாயி இந்த மகதாயி ஆறு கர்நாடகாவின் தென்மேற்கு நிலப்பரப்பில் பாய்ந்து வருகிறது. மகதாயி ஆற்றின் டெல்டா பாசானம் கர்நாடகா தான். இப்போது மகதாயி ஆற்றில் நீர் இருப்பு வெளியேற்றம் அளவுக்கு இல்லையென்று கோவா மாநிலம் ஆற்று நீரை நிறுத்திவிட்டது.

இதனால் கர்நாடகா பாசன பகுதிகள் வறண்டு விட்டதாகவும் உடனடடியாக ஆற்று நீர் பங்கீடு முறையின் படி கர்நாடகாவுக்கு மகதாயி ஆற்று நீரை விட வேண்டும் எனவும் கர்நாடகா அரசு அதற்கு முழு முயற்சி எடுப்பதோடு மத்திய அரசு கோவா மாநில அரசுடன் பேசி ஆற்று நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கர்நாடகா மாநிலம் முழுக்க கன்னட சலுவாலியா அமைப்பு "பந்த்" நடத்தி வருகிறது.

இதனால் கர்நாடகா முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் தருமபுரி மாவட்டத்தில் ஒசூரிலும், சேலம் மாவட்டம் கொளத்தூர் பாலாறு செக்போஸ்டிலும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் கர்கேகன்டியில் மற்றும் கேர்மாளம் செக்போஸ்ட்டிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் மைசூர், சாம்ராஜ் நகர் செல்வம் வழியில் உள்ள தமிழகத்தின் முக்கிய மலை கிராமமான தாளவாடி பேருந்து நிலையத்திலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பரபரப்பாக எப்போதும் இருக்கும் தாளவாடி பேருந்து நிலையம் சற்று வெறிச்சோடி காணப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போலீசார் வனப்பகுதி எல்லைகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

- ஜீவாதங்கவேல்

சார்ந்த செய்திகள்