
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு விடுதியில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஒருவர் பின் தொடர்ந்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவியின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவியிடம் என்ன நடந்தது எனக் கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாணவிகள் இது தொடர்பாகக் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விடுதியில் காவலாளி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில், காவலாளியே அங்குத் தங்கியிருந்த மாணவிக்கு பாலியல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.