மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு தங்க குதிரை வாகனத்தில் கோவில் பிராகத்தில் எழுந்தருளி பச்சைபட்டுடுத்தி வைகையாற்றில் இறங்குவது போல மாதிரி ஏற்பாடு செய்து அதில் கள்ளழகர் எழுவது போன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 4.30மணி முதல் 5.30மணி வரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக சுந்தராஜபெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வும், புராணம் வாசித்தல் நிகழ்வும் அழகர்கோவில் சுந்தராஜபெருமாள் திருக்கோவில் உட்பிரகாராத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் பக்தர்கள் தொலைக்காட்சி மூலமாக நேரலையில் காண இந்து அறநிலைத்துறை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வை மாலை 4.30மணிமுதல் தொலைக்காட்சியில் நேரலையாக காணலாம்.
கோவில் வளாகத்தில் ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது விதிகளை மீறி பக்தர்கள் சிலர் உள்ளே சென்றதோடு அதனை வீடியோ எடுத்து வெளியிட்டது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.