



கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது.
கலைஞரின் நூற்றாண்டு விழாவானது திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.ச சார்பாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் முடி திருத்துவோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தொமுச பொதுச்செயலாளர் கணேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பு செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொமுச பேரவை பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மராத்தான் போட்டியில் எட்டு முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவர்களும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில், ''கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொமுச நிறுவுவதற்கு கலைஞர் அரும்பாடுபட்டார். முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியத்தையும் வழங்கியவர் கலைஞர் தான். எனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடுவதில் தோமுசவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.