முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தனது பேரனின் முதல் பிறந்த தினமான இன்று திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து குடும்பத்துடன் வாழ்த்து பெற்றனர்.
உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கலைஞர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் தந்தை மற்றும் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார்.
அழகிரியின் பேரன் பிறந்ததினத்தை ஒட்டி அவரது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற வந்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.