இன்றைய பஞ்சாங்கம்
25-12-2024, மார்கழி 10, புதன்கிழமை, தசமி திதி இரவு 10.29 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.22 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசி பலன் - 25.12.2024
மேஷம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனகவலைகள் தோன்றும். வியாபாரத்திற்கான வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக முன்னேற்றத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.