Skip to main content

உழைப்பின் உச்சத்தை காட்டியவர் கலைஞர்!

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
kalaignar



தந்தைப் பெரியாறின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்னிருத்தி போராட்ட இயக்கமாக உருவான சமுதாய இயக்கத்தில் இளம் பிராயத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 13க்கும் மேற்ப்பட்ட வழக்குகளை சந்தித்து களப்பணி ஆற்றிய நேரத்தில் அந்த இயக்கத்தில் சில தலைவர்கள் என்னை புறக்கணித்ததால் 1996ல் ஆண்டிமடம் அண்ணன் எஸ். எஸ். சிவசுப்பிரமணியம் மூலமாக கலைஞர் என்னை கழகத்தில் இணைத்து அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் என்னை செந்துறை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடச் செய்து வெற்றிபெற வைத்தார்கள். 
 

 

 

2001ல் சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நாமக்கல்லில் இருந்த என்னை சென்னைக்கு அழைத்து அங்கீகாரம் கொடுத்தார்கள்.  
 

திமுக ஆட்சி வந்து கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் வீரபாண்டியார் மூலமாக வ. ச. தலைவர்களை அழைத்து பேசி மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் (MBC) என ஒரு பிரிவை உருவாக்கி 108 சாதிகளை இணைத்து 20% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார்கள்.
 

வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க அப்போது பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்காணிக்கச் செய்தார்கள். 
 

மேலும் சாலை மறியலில் உயிரிழந்த 21 போராளிகளின் குடும்பத்தினருக்கு ரூ. 3,00,000 (மூன்று லட்சம்) வைப்பு நிதியாகவும், மாதம் ரூ 3,000 பென்சனாகவும் கொடுக்க உத்தரவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் சட்டமன்றத்திலேயே இவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டுப்போராளிகள் என முழங்கி மரம் வெட்டிகள் என்று சொன்ன ஜெயலிதாவின் முகத்தில் கறி பூசி வன்னியர்களுக்கு ஒரு கௌரவத்தை கொடுத்தார்கள். 
 

 

 

அதுமட்டுமல்லாமல் 1,50,000 வ. ச. தினர் மீது போடப்பட்டிருந்த 11,000 வழக்குகளை தள்ளுபடி செய்து பல குடும்பங்களை காத்தவர் கலைஞர். 
 

போராட்ட காலத்தில் உயிரிழந்த போராளிகளின் தியாகத்தாலும், போராட்டத்தை முன்னெடுத்து சென்ற தலைவர்களின் முயற்ச்சியாலும், களப்போராளிகளாக இருந்து போராட்டத்தை வென்றெடுத்து எந்த பலனையும் அனுபவிக்காமல் இன்றுவறை போராட்ட காலத்தில் தான் ஈடுபட்டதே பெருமையாக எண்ணி கொண்டிருக்கும் சக தோழர்களின் உழைப்பாலும், இவற்றுக்கெல்லாம் மதிப்பளித்து ஒரு அங்கீகாரம் வழங்கிய திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவுகளாலும், வன்னியர் இனம் தலைநிமிர்ந்து நிற்கிறது. 
 

தன்பிள்ளை வளர ஊரார் பிள்ளையை இயற்கைக்கு உணவாக கொடுக்கும் தலைவர்கள் உள்ள இந்த நாட்டில் தன் பிள்ளையை தியாக வேள்வியில் இறக்கிவிட்டு உழைப்பின் உச்சத்தை காட்டியவர் கலைஞர்.
 

பாளையங்கோட்டை சிறைக்கு செல் என்றாலும் பதவி ஏற்று கோட்டைக்கு செல் என்றாலும் இரண்டையும் சமமாக கருதுபவர் என் தம்பி கருணாநிதி என சொன்ன அறிஞர் அண்ணாவின் பெயரை கலைஞர் பயன்படுத்தாத மேடை கிடையாது. 
 

பெரியாரை கண்டதில்லை, அண்ணாவை பாத்ததில்லை, அவர்களின் கொள்கை வடிவமாக கலைஞரை காணுகின்றேன். அவர் தலைவராக இருந்த காலத்தில் நானும் இந்த இயக்கத்தில் இருந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு. 50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்த வரலாறு உலகில் கலைஞருக்கு மட்டுமே உண்டு. 


mg







அன்புடன்
மு. ஞானமூர்த்தி
தி.மு.க. ஒன்றிய செயலாளர்
செந்துறை.
 

 

சார்ந்த செய்திகள்