இன்று சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி பிரமதரை சந்திக்க முதல்வரின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார் அப்போது பேசுகையில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார் என்ற செய்தியை ஊடகமாகிய நீங்களும் நாளிதழ்களும் பெரிய முக்கிய செய்தியாக வெளியிட்டீர்கள் நானும் அப்படிதான் நம்பினேன்.
ஒருவேளை அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமரைசந்திக்கவைக்க முடியவில்லை எனவே அவர்மட்டுமாவது பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசயிருக்கிறார் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் இன்று பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ செய்தியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுபற்றிய பேச்சிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி முதலமைச்சர் காந்தி மாநாட்டை ஜனாதிபதி கூட்டியுள்ளார் அதில் கலந்துகொள்ளவே அவர் சென்றிருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. அப்படியே பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தாலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி எடப்பாடி பேசமாட்டார். அவர் ஆட்சியை காத்துக்கொள்ள மோடியின் காலில்தான் விழுவாரே தவிர காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேச அவருக்கு தெம்பில்லை ஏனெனில் அவரிடம் அச்சம் இருக்கிறது பயமிருக்கிறது.
கோவையில் குட்கா ஆலை விவகாரத்தில் திமுக ஊராட்சிமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது போலியானது. ஊராட்சிமன்ற தலைவர் கட்டங்கள் கட்ட இடங்கள் அமைத்து தருவதில்தான் அவர்களின் பணியிருக்குமே தவிர குட்கா வியாபாரத்தை அனுமதிக்க முடியாது. அப்படி பார்த்தால் அந்த ஆலைக்கு அனுமதி அளித்தது விஜயபாஸ்கரும்,எடப்பாடி பழனிசாமியும்தான்.
குட்கா வழக்கில் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதை நான் வரவேற்கிறேன், அவர் சொல்வது உண்மையானால் முதலில் விஜயபாஸ்கரும் அதில் தொடர்புள்ள ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயக்குமாருக்கு என் தலைமையில் பாராட்டுவிழாவே வைத்திருப்பேன் எனக்கூறினார்.